

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த ஐந்து மாநிலங்களிலும் சுமார் 85 சதவீத்திற்கு மேல் வாக்குப்பதிவு பதிவானது. இதற்கு SIR ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 84.69 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது, இதற்கு முன்னதாக 2011-ல் 78.29 சதவீத வாக்குகள் பதிவானதுதான் அதிகபட்ச சதவீதமாக இருந்தது.
மேற்கு வங்கத்தில் 93.71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் ஒரு சட்டசபை தேர்தலில் அதிக வாக்குப்பதிவை கண்ட மாநிலம் என்ற பெருமையை மேற்கு வங்கம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக திரிபுரா மாநிலத்தில் 2013 தேர்தலில் 93.61 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடந்த சில வருடங்களாக திரிபுரா, நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் 90 சதவீத வாக்குகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தேர்தலில் அசாம் மாநிலத்தில் 85.38 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 89.83 சதவீத வாக்குகளும் பதிவாகின.