

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. சில இடங்களில் வாக்காளர்கள் தாக்கப்பட்டனர். என்றாலும், விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வருகின்றன.
142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 29-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா சால்ட் லேக்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் அங்கு 2-ம் கட்ட தேர்தலுக்கான கட்சியின் உத்தி குறித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.