மேற்கு வங்கத்தில் 1 மணி நிலவரப்படி 62.18 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக இன்று 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் 1 மணி நிலவரப்படி 62.18 சதவீத வாக்குப்பதிவு
Published on

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மதியம் ஒரு மணி வரை நிலவரப்படி 152 தொகுதிகளில் 62.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பாஸ்சிம் மெட்னிபூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்கம் மாவட்டத்தில் 65.31 சதவீதம் வாக்குகளும், பாங்குரா மாவட்டத்தில் 64.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மால்டாவில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை 9 மணி வரை 18.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டு வாக்களித்தனர். இதனால் 11 மணி நிலவரப்படி 41.11 சதவீதமாக உயர்ந்தது. அடுத்த 2 மணி நேரத்தில் 21 சதவீதம் அதிகரித்து 62.18 சதவீமாக அதிகரித்தது.

பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் மற்றக்கட்சி தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தாக்கப்பட்டனர். இதையும் மீறி அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com