West Bengal: நந்திகிராம் தொகுதியில் SIR மூலம் நீக்கப்பட்டவர்களில் 95.5 சதவீதம் பேர் முஸ்லிம்கள் - அதிர்ச்சி புள்ளிவிவரம்

அதே நேரம் நந்திகிராமில் 75% மக்கள் தொகையைக் கொண்டுள்ள முஸ்லிம் அல்லாதவர்களில் 4.5% மட்டுமே நீக்கப்பட்டள்ளனர்.
West Bengal:  நந்திகிராம் தொகுதியில் SIR மூலம் நீக்கப்பட்டவர்களில் 95.5 சதவீதம் பேர் முஸ்லிம்கள் - அதிர்ச்சி புள்ளிவிவரம்
Published on

மேற்கு வங்கத்தின் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நந்திகிராம் தொகுதி வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட நீக்கங்கள் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

கொல்கத்தாவைச் சேர்ந்த 'சபர் இன்ஸ்டிடியூட்' என்ற ஆராய்ச்சி நிறுவனம், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் உள்ளவர்களில் 25% முஸ்லிம்கள் ஆவர். இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் வெளியிடப்பட்ட துணைப் பட்டியல்களின்படி நீக்கப்பட்ட பெயர்களில் 95.5 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்று அந்நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதே நேரம் நந்திகிராமில் 75% மக்கள் தொகையைக் கொண்டுள்ள முஸ்லிம் அல்லாதவர்களில் 4.5% மட்டுமே நீக்கப்பட்டள்ளனர்.

மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பார்த்தால், முஸ்லிம்களின் நீக்கம் 25 சதவீதத்திற்கு அருகில் இருக்க வேண்டும். ஆனால், அது 95.5 சதவீதமாக இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் 2021 தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

எனவே, இங்குள்ள வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள் அரசியல் ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாய்ப்பு?

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள 19 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

நந்திகிராம் தொகுதியில் முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான ஏப்ரல் 6, அன்று பிற்பகல் 3 மணியுடன் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு, நீக்கப்பட்ட வாக்காளர்கள் இந்தப் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com