

4 மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்பின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
முதற்கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி 152 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந்தேதி 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என ஞானேஷ்குமார் அறிவித்தார்.
ஐந்து மாநிலங்களில் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்தார்.