ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5500 கனஅடியாக நீடிப்பு

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5500 கனஅடியாக நீடிப்பு
Published on

ஒகேனக்கல்:

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ள்ளது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5500 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com