எனக்கு வாய்ப்பு வழங்க ரூ. 5 கோடி கேட்டது திரிணாமுல்: தோல்வியை கண்டு துளியும் ஆச்சரியப்படவில்லை- மனோஜ் திவாரி

இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் நான் போட்டியிட 5 கோடி ரூபாய் கேட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
எனக்கு வாய்ப்பு வழங்க ரூ. 5 கோடி கேட்டது திரிணாமுல்: தோல்வியை கண்டு துளியும் ஆச்சரியப்படவில்லை- மனோஜ் திவாரி
Published on

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் (10,195) அடித்தவருமான மனோஜ் திவாரிக்கு கடந்த 2021 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் அமைச்சராகவும் இருந்தார்.

தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தன்னிடம் சீட் வழங்க 5 கோடி ரூபாய் கேட்டது. நான் வழங்க மறுத்துவிட்டேன் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி குறித்து மனோஜ் திவாரி கூறியதாவது:-

பாருங்கள் இந்த தோல்வியை கண்டு நான் சற்றும் ஆச்சரியப்படவில்லை. ஒரு கட்சி முழுவதுமே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, எந்த துறையிலும் வளர்ச்சி இல்லாதபோது இது நடக்கத்தான் வேண்டும்

அதிகப் பணம் கொடுக்க முடிந்தவர்களால் மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் வாங்க முடிந்தது. இந்த முறை குறைந்தது 70-72 வேட்பாளர்கள், ஒரு வாய்ப்புக்காக சுமார் ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். என்னிடம் பணம் கேட்டார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். பணம் கொடுத்தவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று செக் செய்து பார்க்க வேண்டும்.

டி.எம்.சி.-யைப் பொறுத்தவரை எனக்கான அத்தியாயம் முடிந்துவிட்டது.

இவ்வாறு மனோஜ் திவாரி தெரிவித்தார்.

2019-ல் டிஎம்சி தனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தபோதிலும், அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை. இறுதியில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஷிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இணை அமைச்சர் ஆனேன் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com