VIDEO: பட்டனை அழுத்தினால் நம்பர் பிளேட் மாறும்.. அபராதத்தை தவிர்க்க அதிநவீன டெக்னாலஜியை பயன்படுத்திய குடிபோதை ஆசாமி

ஐதராபாத்தில் இது போன்ற அதிநவீன கருவியைப் பயன்படுத்தி ஒருவர் பிடிபடுவது இதுவே முதல்முறை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
VIDEO: பட்டனை அழுத்தினால் நம்பர் பிளேட் மாறும்.. அபராதத்தை தவிர்க்க அதிநவீன டெக்னாலஜியை பயன்படுத்திய குடிபோதை ஆசாமி
Published on

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து சோதனையின்போது நூதன மோசடி ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.

குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தில் இருந்து தப்பிக்க தனது BMW காரில் 2 நம்பர் பிளேட்களை பொருத்தியுள்ளார்.

காரில் டெல்லி மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களின் பதிவு எண்கள் கொண்ட பலகைகள் உள்ளன.

காரின் உள்ளே இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், நொடியில் ஒரு நம்பர் பிளேட் மறைந்து மற்றொரு பிளேட் தோன்றும்.

ஐதராபாத்தில் இது போன்ற அதிநவீன கருவியைப் பயன்படுத்தி ஒருவர் பிடிபடுவது இதுவே முதல்முறை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கார் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com