வெனிசுலாவில் நிலநடுக்கம்: உதவிக்கரம் நீட்ட இந்தியா தயார்!- பிரதமர் மோடி

அனைத்து விதமான உதவிகளையும் வழங்கத் இந்தியா தயாராக உள்ளது.
PM Modi
பிரதமர் மோடி இரங்கல்
Published on

கரீபியன் கடலில் அமைந்துள்ள தென் அமெரிக்க தீவு நாடு வெனிசுலா. இங்கு 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுவரை 10,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் அச்சம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வெனிசுலாவிலாவில் நாடு முழுவதும் பேரிடர்கால அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார். அவர் கூறியதாவது,

வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் உண்டான பேரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம்.

இந்திய மக்கள் சார்பாக, வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதோடு, இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உறுதுணையாக நிற்கிறோம். இந்தியா அனைத்து விதமான உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com