வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது.விசாரணையில் இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் காரணம் என தெரிய வந்தது.
தீர்ப்பு
தீர்ப்பு
Published on

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாரணாசியில் இந்துப் பல்கலைக்கழகம் அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்தது.

இந்நிலையில், வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com