வந்தேபாரத் ரெயில் விபத்தில் தப்பியது

வந்தேபாரத் ரெயில் டிரைவர் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்தனர்.
வந்தேபாரத் ரெயில் விபத்தில் தப்பியது
Published on

திருவனந்தபுரம்:

இந்தியாவில் அதிவேகமாக இயக்கப்படும் வந்தேபாரத் ரெயில்கள் தற்போது பல மாநிலங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு பகுதிக்கு இயக்கப்படும் வந்தேபாரத் ரெயில், நேற்று மதியம் பையனூர் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், கட்டுமான வேலைக்கு பயன்படுத்தப்பட்ட லாரி தண்டவாளத்தின் குறுக்கே வந்துள்ளது.

இதனை கவனித்த வந்தேபாரத் ரெயில் டிரைவர் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com