VIDEO: ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்த 38 வயது போலீஸ் அதிகாரி

கிரிஷ் பட்டிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
VIDEO: ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்த 38 வயது போலீஸ் அதிகாரி
Published on

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தை சேர்ந்த காவல் அதிகாரி கிரிஷ் பட் (38). இவர் சம்பாவத் மாவட்ட சிறப்பு அதிரடிப்படை பிரிவில் பணியாற்றி வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மில் கிரிஷ் பட் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்கேயே சுருண்டு விழுந்து மயங்கினார்.

ஜிம்மில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

கிரிஷ் பட்டிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். பன்பாசாவில் உள்ள சாரதா காட் மயானத்தில், முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன.

கிரிஷ் பட் ஜிம்மில் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com