VIDEO: மந்திரவாதி பேச்சை கேட்டு பாம்பு கடித்த சிறுவனை 12 மணி நேரம் கங்கையில் மிதக்கவிட்ட பெற்றோர் - சிறுவன் பரிதாப பலி

கங்கை நதி சிறுவனின் விஷத்தை முறிக்கும் என்று மந்திரவாதி அந்தக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
VIDEO: மந்திரவாதி பேச்சை கேட்டு பாம்பு கடித்த சிறுவனை 12 மணி நேரம் கங்கையில் மிதக்கவிட்ட பெற்றோர் - சிறுவன் பரிதாப பலி
Published on

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் உள்ள பிதாம்பூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் அமித்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வீட்டுத் தோட்டத்தில் சிறுவனை பாம்பு கண்டித்துள்ளது.

பாம்பு கடித்த பிறகு மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக சிறுவனின் குடும்பத்தினர் ஒரு மந்திரவாதியிடம் உதவி நாடியுள்ளனர்.

கங்கை நதி சிறுவனின் விஷத்தை முறிக்கும் என்று மந்திரவாதி அந்தக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

மந்திரவாதியின் அறிவுறுத்தல்படி, அந்தக் குடும்பத்தினர் 14 வயது சிறுவனை மூங்கில் கம்புகளில் கட்டி, 12 மணி நேரம் கங்கை நடத்தியில்மிதக்க விட்டுள்ளனர்.

12 மணி நேரத்திற்குப் பிறகும் சிறுவன் அசையாததால், குடும்பத்தினர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுவன் இறந்துவிட்டான் என மருத்துவர்கள் அறிவித்தனர். மூங்கில் கம்புகளில் கயிற்றால் கட்டப்பட்ட சிறுவன் ஆற்றில் மிதக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com