

அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (23.05.26) இந்திய வந்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.
சர்வதேச அளவில் நிறைய மாற்றங்கள் மாறி வரும் சூழலில், தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் இந்த பயணத்தின் முக்கியமான நோக்கமாக கருதப்படுகிறது.
இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு மார்க்கோ ரூபியோ தனது மனைவியுடன் வந்து சேர்ந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒருவர் கொல்கத்தா வருவது இதுவே முதல்முறையாகும்.
அரசு முறை பயணத்தின் இன்று முதல் நாளாக கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா இல்லத்திற்கு நேரில் சென்ற அவர், அங்குள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பிறகு கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது அவர் தலைநகர் புதுடெல்லிக்குப் புறப்பட்டுள்ளார். இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் (24- 25) ஆகிய தேதிகளில் ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இப்பயணத்தின் இறுதி நாளான மே 26 அன்று, புதுடெல்லியில் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோரின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் மார்க்கோ ரூபியோ பங்கேற்கவுள்ளார்.
இந்திய வெளியறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இந்த பயணத்தை சிறப்பாக முடித்து விட்டு அமெரிக்காவிற்கு செல்லவிருக்கிறார்.