அமெரிக்காவில் இருந்து LPG சரக்குக் கப்பல் இந்தியா வந்தடைந்தது - எரிவாயு தட்டுப்பாடு குறைய வாய்ப்பு

அமெரிக்காவில் இருந்து கூடுதல் LPG இறக்குமதி செய்ய இந்தியா தொடங்கியுள்ளது.
US LPG Ship
US LPG Ship
Published on

மத்திய கிழக்கு போர் சூழலில் வளைகுடா நாடுகளுடன் முக்கிய வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வழியாக அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்த ஈரான் மற்ற நாட்டு கப்பல்களை அனுமதிக்கிறது.

அந்த வகையில் இந்தியக் கொடி ஏந்திய ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய இரண்டு பெரிய எல்பிஜி டேங்கர் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்த இரண்டு கப்பல்களும் இணைந்து மொத்தம் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி (சமையல் எரிவாயு) உடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்தன. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறையும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கூடுதல் LPG இறக்குமதி செய்ய இந்தியா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருந்து LPG ஏற்றி வந்த PYXIS PIONEER சரக்குக் கப்பல், மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com