நோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனையை இடிக்க உத்தரவு

நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதுவெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை முற்றிலும் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனையை இடிக்க உத்தரவு
Published on

லக்னோ:

டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்கள் எண்ணிக்கை குறைவதன் காரணமாக, நோயாளிகளுக்கு ரத்தம் மூலமாக பிளேட்லெட்கள் ஏற்றப்படும். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்த பிளேட்லெட்டுக்குப் பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அந்த மருத்துவமனைக்கு அனுமதியின்றி கட்டிடம் கட்டியதற்காக, கட்டடத்தை இடிப்பதற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை முற்றிலும் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும், அந்த இடத்தின் உரிமையாளர் பதில் அளிக்காததால் மீண்டும் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com