சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை

சுடுகாட்டிற்கு அருகில் முகவர்களும் இடைத்தரகர்களும் உள்ளனர்.
சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை
Published on

உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்த உடல்களில் இருந்து ஆடைகளைத் திருடி, அவற்றை ஒரு கும்பலுக்கு விற்பனை செய்கின்றனர்.

அந்தக் கும்பல், இறந்த உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆடைகளை, அவை புதியவை என்று மக்களை நம்ப வைப்பதற்காக உறைகளில் சுற்றி சந்தையில் விற்பனை செய்கிறது.

இந்த மோசடி இந்தூரிலிருந்து அகமதாபாத் வரை நடந்து வருகிறது. சுடுகாட்டிற்கு உடல்கள் வந்து சேரும்போது, அங்குள்ள ஊழியர்கள் இறுதிச் சடங்குகளுக்கு முன்பு உடல்களில் இருந்து ஆடைகளைக் கழற்றி, அவற்றை இந்தக் கும்பலிடம் கொடுக்கிறார்கள்.

அந்த ஆடைகளைத் துவைத்து, இஸ்திரி செய்து, சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

சுடுகாட்டிற்கு அருகில் முகவர்களும் இடைத்தரகர்களும் உள்ளனர். ஆடைகள் கிடைத்தவுடன், அவர்கள் அவற்றைச் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கிறார்கள்.

சால்வை- ரூ.20 முதல் ரூ. 40 வரை, குர்தா பைஜாமா- ரூ.45, சட்டை, பேண்ட் - ரூ.50, புடவை- ரூ. 70 முதல் ரூ.80 வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். சுடுகாட்டு ஊழியர்களிடமிருந்து முகவர்கள் ஆடைகளை எவ்வளவு விலைக்கு வாங்குகிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த சட்டவிரோத வியாபாரம் அம்பலமானதால், உள்ளூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான வியாபாரம் எப்படி அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் போனது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com