வாட்டர் டேங்க் மேல் ஏறியபோது உடைந்த ஏணி: 15 மணி நேரம் தவித்த சிறுவர்கள்

சிறுவர்கள் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொட்டியின் உச்சியில் தவித்தனர்.
வாட்டர் டேங்க் மேல் ஏறியபோது உடைந்த ஏணி: 15 மணி நேரம் தவித்த சிறுவர்கள்
Published on

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள பகுதியில் இரண்டு சிறுவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே விளையாடுவதற்காக ஏறியுள்ளனர். அவர்கள் மேலே சென்ற பிறகு, தொட்டியின் இரும்பு ஏணி திடீரென உடைந்து கீழே விழுந்தது.

இதனால் கீழே இறங்க வழியில்லாமல் அச்சிறுவர்கள் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொட்டியின் உச்சியில் தவித்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆனாலும் அவர்களால் சிறுவர்களை மீட்க முடியவில்லை.

இந்நிலையில், மாநில அரசின் கோரிக்கையின்படி இந்திய விமானப்படையின் மத்திய வான்வழிப் படைப்பிரிவு எம்.ஐ.-17 வி5 ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபட்டது. இன்று அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சிறுவர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com