முதியோருக்கு ஏசி வசதியுடன் பராமரிப்பு மையம் - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி

முதியவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடி, தங்கள் நேரத்தை செலவிடும் வகையில் இந்த 'முதியோர் பராமரிப்பு மையம்' அமைக்கப்பட்டுள்ளது.
Senior citizen care centre in UP
Published on

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின்படி, மொராதாபாத் மாநகராட்சியில் முதியோருக்கான குளிரூட்டப்பட்ட பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்டல ஆணையர் அஞ்சனே குமார் சிங் கூறுகையில்,

ஒரே வயதுடையவர்கள், குறிப்பாக முதியவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிப் பொழுதைக் கழிக்கும் வகையில் இந்த முதியோர் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பல நேரங்களில் தலைமுறை இடைவெளி மற்றும் தனிமை போன்ற சூழல்கள் காணப்படுவதால் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு குழந்தைகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் யோகி ஆதித்யநாத் நீண்ட காலத்திற்கு முன்பே இது குறித்த ஒரு திட்டத்தை முன்வைத்து அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். அதன்படியே இது உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com