என் மலர்
இந்தியா

Union Budget 2026: வறுமையில் உள்ள மக்களுக்கான சிகிச்சை வசதிகள் 50% அதிகரிக்கப்படும் - மருத்துவத்திற்கான அறிவிப்புகள்
- சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
- சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
குறிப்பாக மருத்துவ துறை குறித்து பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் உயிரி மருத்துவ துறையில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் 5 முக்கிய இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய பயோ பார்மா சக்தி திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, கால்நடை மருத்துவத்தை மேம்படுத்த, புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 2 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். வறுமையில் உள்ள மக்களுக்கான சிகிச்சை வசதிகள் 50% அதிகரிக்கப்படும். புதிதாக 1000 மருத்துவ பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும், கார் விபத்துக்கு இழப்பீடுகளுக்கு வரி தளர்வு அளிக்கப்படும்.
ஆயுர்வேதத் துறை விரிவுபடுத்தப்படும். மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும், ஜாம்நகரில் உள்ள WHO பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.






