Union Budget 2026: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார். மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
Union Budget 2026: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு
Published on

பாராளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்து தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.

இதனிடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த உடன் அவை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com