இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல் உலக நாடுகளிடம் பாக்., கெஞ்சியது- பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது என்றார். பிரதமர் மோடி.பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்றார் பிரதமர் மோடி.
இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல் உலக நாடுகளிடம் பாக்., கெஞ்சியது- பிரதமர் மோடி
Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கு தகர்த்தன. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமையங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

தாக்குதல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று அழித்துள்ளோம். ஒரே தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கோவில்கள், குருத்வாராக்கள், பள்ளிகளை குறிவைத்து கோழைத்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியுள்ளது.

10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும்போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது.

பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com