மேற்குவங்க தேர்தல் விவகாரம்: டிரம்புக்கு கடிதம் எழுதிய சஞ்சய் ராவத்

மேற்கு வங்கத்தில் 207 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
மேற்குவங்க தேர்தல் விவகாரம்: டிரம்புக்கு கடிதம் எழுதிய சஞ்சய் ராவத்
Published on

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க (207 இடங்கள்) வெற்றி பெற்றதை அடுத்து அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே கட்சியின் சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் இந்தியாவின் உள்நாட்டு விஷயம், அதில் டிரம்ப் தலையிடுவது முதிர்ச்சியற்றது மற்றும் தவறானது.

மம்தா பானர்ஜியின் ஜனநாயகப் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதிபர் டிரம்ப் உண்மையான நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், வெறும் வெற்றியை மட்டும் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தப்பட வேண்டும். அதிபர் டிரம்பை திருத்துவது எனது கடமை என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com