வாக்காளர் பட்டியலில் பெயரில்லை: நடிகைகளுக்கு கொடுத்த வாய்ப்பை திரும்ப பெற்றது டிவென்டி20 கட்சி

பாஜக கூட்டணியில் உள்ள டிவென்டி20 என்ற கட்சி இரண்டு நடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்
வாக்காளர் பட்டியலில் பெயரில்லை: நடிகைகளுக்கு கொடுத்த வாய்ப்பை திரும்ப பெற்றது டிவென்டி20 கட்சி
Published on

கேரளாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 23-ந்தேதி கடைசி நாளாகும். இதனால் பிரதான கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் பாஜக-வின் கூட்டணியில் உள்ள டிவென்டி20 (Twenty20) கட்சி, இரண்டு நடிகைகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி வேட்பாளர்களில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரில் லட்சுமி பிரியா என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்தது. அதேபோல் கோட்டயம் மாவட்டம் எட்டுமானூரில் வீணா நாயர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அவர்களை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை டிவென்டி20 கட்சி திரும்பப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய தேர்தலில் இருவருடைய பெயர்களும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்துள்ளது.

தற்போது லட்சுமி பிரியாவுக்குப் பதில் ஜிபி பதிக்கல் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜிபி பதிக்கல் பெரும்பாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஆவார். சமீபத்தில் டிவென்டி20 கட்சியில் இணைந்துள்ளார்.

ரியால்டி ஷோவில் கலந்து கொண்ட அஞ்சலி நாயர் திரிபுனிதுராவில் போட்டியிடுகிறார். இயக்குநர் அகில் மரார் த்ரிக்ககராவில் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com