இந்தியாவை 'நரகக்குழி' என டிரம்ப் கூறியது குறித்த கேள்வி.. மார்கோ ரூபியோ சொன்ன பதில் இதுதான்

சீனா, இந்தியா அல்லது இந்த பூமியில் உள்ள வேறு ஏதேனும் ஒரு நரகக் குழியிலிருந்து தங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இங்கு அழைத்து வருகிறார்கள்.
இந்தியாவை 'நரகக்குழி' என டிரம்ப் கூறியது குறித்த கேள்வி.. மார்கோ ரூபியோ சொன்ன பதில் இதுதான்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நான்கு நாள் பயணமாக இந்திய வந்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவை "நரகக் குழி" என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தது குறித்து ரூபியோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சுற்றி வளைத்து பதில் தந்த ரூபியோ, "அதிபர் டிரம்ப் இந்தியாவை மிகவும் நேசிக்கிறார். அவர் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகர்; குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர் ஆவார். அதிபர் டிரம்ப் நான் இங்கு வர வேண்டும் என்று விரும்பியதால்தான் நான் இப்போது இந்தியாவில் இருக்கிறேன்" என்று கூறி முடித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை தொடர்பாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' சமூக ஊடகப் பக்கத்தில், "இங்கு பிறக்கும் ஒரு குழந்தை உடனடியாக அமெரிக்கக் குடிமகனாக மாறுகிறது. அதன் பிறகு அவர்கள் சீனா, இந்தியா அல்லது இந்த பூமியில் உள்ள வேறு ஏதேனும் ஒரு நரகக் குழியிலிருந்து தங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இங்கு அழைத்து வருகிறார்கள்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com