ஐதராபாத் அருகே திருநங்கை வெட்டிக்கொலை

பாலா நகர் வெறிச்சோடிய பகுதியில் ஷீலா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத் அருகே திருநங்கை வெட்டிக்கொலை
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் வாரங்கலை சேர்ந்தவர் ஷீலா (வயது 30). திருநங்கையான இவர் ஐதராபாத் அடுத்த சனத் நகரில் வசித்து வந்தார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கடைகளில் காசு வாங்கி பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பாலா நகர் வெறிச்சோடிய பகுதியில் ஷீலா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது தலை மற்றும் உடல் முழுவதும் பயங்கர வெட்டு காயங்கள் இருந்தன.

ஷீலாவின் பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கையை அழைத்துச் சென்று கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநங்கை கொலை செய்யப்பட்டதை அறிந்த ஏராளமான திருநங்கைகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். ஷீலாவை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com