

ஈரானின் இரண்டு பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் குஜராத்தின் சிக்கா துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளன.
கடந்த மார்ச் மாத மத்தியில் ஈரானின் கார்க் தீவிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல்கள், சுமார் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைக் கொண்டு வந்துள்ளன.
2019-ஆம் ஆண்டு டிரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் விதித்த கடுமையான தடைகளால் இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருந்தது.
தற்போது ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்துபாதிப்பால் உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழலைக் கருத்தில் கொண்டு, கடலில் தேங்கியிருக்கும் ஈரானிய எண்ணெய் கப்பல்களை வாங்குவதற்கு அமெரிக்கா சில நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவில் நங்கூரமிட்டுள்ளன.
உலக அளவில் எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, தனது தேவைகளுக்காகப் பல்வேறு நாடுகளைச் சார்ந்துள்ளது.
ரஷியாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் அதே வேளையில், ஈரானிடமிருந்து மீண்டும் எண்ணெய் வரத் தொடங்கியிருப்பது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது