அதிருப்தி எம்.பி.க்கள் விவகாரம்: சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த அபிஷேக் பானர்ஜி

திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
abhishek banerjee
Published on

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, அக்கட்சியை காப்பாற்ற மம்தா பானர்ஜி போராடி வருகிறார். வெற்றி பெற்ற 80 எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 65 பேர் வரை தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மேலும், 19 முதல் 20 திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் ஒன்றாக கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் பிளவுப்பட்டு இருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிளவு குரூப்பிடம் சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மம்தாவின் உறவினரும், மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்

திரிணாமூல் காங்கிரசை முறையாக அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மற்றும் கொறடா மூலம் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒற்றைக் கட்சியாக கருதவேண்டும். திரிணாமூல் காங்கிரசின் எந்தவொரு தனிப்பட்ட குழு/பிரிவிற்கும் அங்கீகாரம், அந்தஸ்து அல்லது வசதியை மறுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, மற்றொரு எம்பியான கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட குழுவினர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை டெல்லியில் இன்று மாலை சந்தித்தனர். அப்போது அதிருப்தி எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com