திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு தலைமுடியை காணிக்கையாக செலுத்திய ஆனந்த் அம்பானி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி அவருக்கு ஒரு நினைவு பரிசையும் பிரசாதத்தையும் வழங்கினார்.
Tirupati Visit Anand Ambani
Published on

ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

இன்று அதிகாலை 1 மணியளவில் மூல தெய்வத்தின் உதயத்தை குறிக்கும் மங்களகரமான சுப்ரபாத சேவையில் அவர் பங்கேற்றார்.

இதையடுத்து வெங்கடேஸ்வர பெருமாளுக்கு தனது தலைமுடியை மொட்டை அடித்து தானமாக வழங்கும் சடங்கை ஆனந்த் அம்பானி மேற்கொண்டார்.

வெங்கடேஸ்வர பெருமாள் தரிசனத்திகு பிறகு கோவில் அர்ச்சகர்கள் அவருக்கு வேத ஆசிகளை வழங்கினர். மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி அவருக்கு ஒரு நினைவு பரிசையும் பிரசாதத்தையும் வழங்கினார்.

முன்னதாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோவிலில் கடந்த வாரம் ஆனந்த் அம்பானி வழிபாடு செய்திருந்தது குறிப்படத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com