திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4 கோடியே 34 லட்சம் உண்டியல் காணிக்கை

வார விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்ததாக தகவல்.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

திருமலை:

கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கோடை விடுமுறை முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தரகளின் கூட்டம் குறையவில்லை. வார விடுமுறை  என்பதால் ஏழுமலையான் கோவிலில் நேற்றும் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும் ,சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக நேற்று ஒரே நாளில் ரூ.4 கோடியே 34 லட்சம் கிடைக்கப் பெற்றதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com