search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்வதேச புலிகள் தினம்: ராஜஸ்தானில் பிறந்த புலிக்குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகரா பெயர்
    X

    சர்வதேச புலிகள் தினம்: ராஜஸ்தானில் பிறந்த புலிக்குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகரா பெயர்

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மற்ற குட்டிகளுக்கு 'சிரஞ்சீவி' மற்றும் 'சிராயு' என்று பெயர் சூட்டப்பட்டது.

    புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த ஒரு புலிக்குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

    மற்ற குட்டிகளுக்கு 'சிரஞ்சீவி' மற்றும் 'சிராயு' என்று பெயர் சூட்டப்பட்டது.

    இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச புலிகள் தினத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றும் வகையில், ரந்தம்போரின் டி-111 என்ற புலியின் மூன்று குட்டிகளுக்கு (இரண்டு புலிகள் மற்றும் ஒரு புலி) 'சிரஞ்சீவி', 'சிராயு' மற்றும் 'அவனி' என பெயரிடப்பட்டுள்ளது.

    2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா பூனியாவின் நினைவாக டைக்ரஸ் டி-17 க்கு கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டது. அதேபோல், இப்போது குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாரா பெயரில் அவனி என்று பெயரிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவனி லெகாரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் வெண்கலப் பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×