

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டத்திக் கோட்டில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த
21-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளரான திருவாம்பாடியை சேர்ந்த சதீசன் (வயது 46) உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சதீசன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 13 ஆண்டுகளாக பட்டாசு தொழில் செய்து வந்த இவர், கோவில் திருவிழாக்களின்போது வாண வேடிக்கை நிகழ்த்துவதில் திறமையானவர் என அறியப்படுகிறார். மேலும் இந்த ஆண்டு திருச்சூர் பூரத்திற்குப் பிறகு, சதீசன் பட்டாசுத் தொழிலில் இருந்து விலகி முழுமையாக விவசாயத்திற்கு மாற முடிவு செய்திருந்தாராம்.
இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் அவர் பலியானது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.