பெண் குழந்தைகளின் கண்ணியத்தை காப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது - பிரதமர் மோடி உறுதி

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் மற்றும் வாய்ப்புகள் வழங்குவதிலும் மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி, 


தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகளின் முன்மாதிரியான சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் இது உள்ளது.

எங்கள் அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும், பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் சக்தியை வலுப்படுத்துவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com