தெலுங்கானாவில் கார்-லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

ஒரு பெண் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
தெலுங்கானாவில் கார்-லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
Published on

தெலுங்கானாவில் ஐதராபாத் அருகே நேற்று மாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் வெளிவட்ட சம்ஷாபாத் எக்ஸிட் 16 அருகே அதிவேகமாக வந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

வேகத்தில் கார் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது. காரை மீட்க கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன.

காரில் பயணம் செய்த இரு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு பெண் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த இக்குடும்பத்தினர், ஐதராபாத் சனத்நகரில் வசித்து வந்தனர்.

படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஓட்டுநர் தூங்கியதே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com