மகளிருக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை: 1.1 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தகவல்

அன்னப்பூர்னா திட்டம் மூலமாக பெண்கள் வங்கி கணக்கிற்கு 3 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி
Published on

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். மகளிருக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை (அன்னப்பூர்னா) திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளித்தது.

கட்டணமில்லா பேருந்து திட்டம்

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி மேற்கு வங்கத்தில் முதன்முதலாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற உடன பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியது.

மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 3 ஆயிரம்

பின்னர் மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வங்கிகளுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட 1.1 கோடி மகளிருக்கு 3 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், 26 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆய்வு மிகவும் அவசியமானது. நாங்கள் வரி செலுத்துபவர்களின் பணத்தை அரசு கஜானாவில் இருந்து இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு அளிக்கமாட்டோம். குடியுரிமை மற்றும் வசிப்பிடம் தொடர்பான சந்தேகம் உள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி ஆட்சிக் காலத்தில் லக்ஷ்மிர் பந்தர் என்ற பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 முதல் 60 வயதிலான பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு பெண்களுக்கு மாதந்தோறும் 1200 ரூபாய் வழங்கப்பட்டது, மற்றவர்களுக் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக அன்னப்பூர்னா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com