தமிழில் தமிழ்ச்செல்வன்.. மற்ற மொழிகளில் யாருக்கு? - சாகித்ய அகாடமி விருது விவரம் |Sahitya Akademi

தமிழில் தமிழ்ச்செல்வன்.. மற்ற மொழிகளில் யாருக்கு? -  சாகித்ய அகாடமி விருது விவரம் |Sahitya Akademi
Published on
Summary

தமிழில் மூத்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' ஆய்வு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்ய அகாடமி விருது உள்ளது.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 24 மொழிகளில் 8 கவிதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள், 1 இலக்கிய விமர்சன புத்தகம், 1 சுயசரிதை மற்றும் 2 வாழ்க்கை வரலாறுகள் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் மூத்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' ஆய்வு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

அதேபோன்று கன்னடத்தில் அமரேஷ் நுகடோனி, தெலுங்கில் நந்தினி சித்தா ரெட்டி, மலையாளத்தில் என். பிரபாகரன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெறுகின்றனர்.

தெலுங்கில் நந்தினி சித்தா ரெட்டியின் ‘அனிமேஷ்’ கவிதைப் படைப்பு, மலையாளத்தில் பிரபாகரனின் ‘மாயமனுஷ்யர்’ நாவல், கன்னடத்தில் அமரேஷ் நுகடோனியின் ‘தாதே சீரு பாப்பா’ சிறுகதை ஆகியன விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளாகும்.

மேலும் ஆங்கில எழுத்தாளரும் முன்னாள் தூதருமான நவ்தேஜ் சர்னாவின் 'கிரிம்சன் ஸ்பிரிங்' நாவலும், இந்தி எழுத்தாளர் மம்தா காலியாவின் நினைவுக் குறிப்பான 'ஜீதே ஜீத் அலகாபாத்' ஆகியவையும் இந்த ஆண்டு விருதுக்கு தேர்வாகி உள்ளன.

வரும் மார்ச் 31 ஆம் தேதி வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்த நிகழ்வில் செப்புப் பட்டயம், சால்வை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com