search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரூ.137 கோடியே 46 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் வசிக்க முடியவில்லை என புலம்பும் கோடீஸ்வரர்
    X

    ரூ.137 கோடியே 46 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் வசிக்க முடியவில்லை என புலம்பும் கோடீஸ்வரர்

    • வீட்டை மேலும் ரூ.10 கோடியே 18 லட்சம் செலவு செய்து சீரமைக்க வேண்டியது உள்ளது.
    • வீடு வசிக்க லாயக்கற்ற நிலையில் இருப்பதாக அதனை வாங்கியவரே கூறியிருப்பதால் மீண்டும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் டாம் கிளான் பீல்ட். இவர் கடந்த மாதம் நார்த் ஹேவன்பாயின்ட் பகுதியில் ஒரு பழமையான வீட்டை வாங்கினார். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.137 கோடியே 46 லட்சத்து 58 ஆயிரத்து 245 பணம் செலுத்தினார்.

    அப்போது இது உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீடு என்ற பெருமையை பெற்றது. இப்படி அதிக விலை கொடுத்து வாங்கிய வீட்டுக்கு டாம் கிளான் குடும்பத்துடன் குடியிருக்க சென்றார். அதன்பின்பு தான் அந்த வீட்டின் உண்மையான நிலை அவருக்கு தெரியவந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டாம் கிளான், இவ்வளவு விலை கொடுத்த வாங்கிய வீட்டில் குடியிருக்க முடியவில்லை என்று புலம்பி உள்ளார். வீடு கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதியில் தான் உள்ளது, என்றாலும் இங்கு குடியிருக்க வேண்டும் என்றால் நான் இந்த வீட்டை மேலும் ரூ.10 கோடியே 18 லட்சம் செலவு செய்து சீரமைக்க வேண்டியது உள்ளது. இது தேவைதானா? என்று கூறியுள்ளார்.

    வீட்டை வாங்கும் போது ஒரு சதுர அடிக்கு உலகிலேயே அதிக விலை கொடுக்கப்பட்ட வீடு என்ற பெருமையை பெற்று சமூக வலைதளத்தில் வைரலான செய்தி இப்போது, அந்த வீடு வசிக்க லாயக்கற்ற நிலையில் இருப்பதாக அதனை வாங்கியவரே கூறியிருப்பதால் மீண்டும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×