மனைவியை கொடூரமாக கொன்று செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த தொழிலாளி- போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியை கொடூரமாக கொன்று செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த தொழிலாளி- போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் மகாதேஸ்வரா பெட்டாவை அடுத்த நாகமலைப்பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து முனிராஜ், மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியை பார்க்க வந்த முனிராஜ் சமரசம் பேசுவதற்காக அங்குள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்றார். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆத்திரம் தீராத முனிராஜ் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்தார். வீடியோவாக படம் பிடித்த அவர் அந்த காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இந்த காட்சியை அவரது உறவினர்கள் பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக முனிராஜை போனில் தொடர்பு கொண்டனர். இந்த விவரம் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கும் தெரியவந்தது. போலீசார் முனிராஜை தொடர்பு கொண்டனர்.

இதனால் பதறிய முனிராஜ் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மகாதேஸ்வரன் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com