தொடர் பலி கேட்கும் ஆற்றுப் பாலம்

ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் பலி கேட்கும் ஆற்றுப் பாலம்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவிட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷீபா ஜாய். இவர் கருவண்ணூர் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்பு அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் தனது கைப்பை மற்றும் செல்போனை வைத்துவிட்டு, பாலத்தின் மேலே இருந்து ஆற்றுக்குள் குதித்தார். ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு ஷீபா ஜாய் பிணமாக மீட்கப்பட்டார். இதே இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தார். மேலும் அந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

அது மட்டுமின்றி இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபரும், மாணவியும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்கள். ஆகவே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com