கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏவுக்கு நடந்த விபரீதம்

கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தபின் எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங் சற்று கிரிக்கெட் விளையாடினார்.பூபிந்தர் சிங்கை மீட்ட உதவியாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏவுக்கு நடந்த விபரீதம்
Published on

ஒடிசா மாநிலம் கலாஹந்தி மாவட்டம் நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தபின் பூபிந்தர் சிங் சற்று கிரிக்கெட் விளையாடினார். பூபிந்தர் சிங் பேட்டிங் செய்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பூபிந்தர் சிங் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து பூபிந்தர் சிங்கை மீட்ட உதவியாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க வந்த பூபிந்தர் சிங் எம்.எல்.ஏ. காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com