திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த அமெரிக்க நிறுவனம்

இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களும் மாற்றப்பட்டன.டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் என தெரியவந்தது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த அமெரிக்க நிறுவனம்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு இன்று காலை திடீரென ஹேக் செய்யப்பட்டது. இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களும் மாற்றப்பட்டன.

இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் என தெரியவந்தது. மேலும் டுவிட்டர் கணக்கை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு சரிசெய்யப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com