search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை- பிணத்தை பார்த்து வார்டன் மயங்கி விழுந்து மரணம்
    X

    கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை- பிணத்தை பார்த்து வார்டன் மயங்கி விழுந்து மரணம்

    • மாணவர்கள் விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது தாரனேஸ்வரர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் அவர் பிணத்தை பார்த்து விடுதி வார்டன் மயங்கி விழுந்து இறந்த சம்பவமும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (வயது 21).

    திருப்பதி கூடூரு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் விடுதிஅறையில் தனியாக இருந்த தாரனேஸ்வரர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். மாணவர்கள் விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது தாரனேஸ்வரர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விடுதி வார்டன் சீனிவாசலுக்கு (57) தகவல் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசலு மாணவரின் பிணத்தை பார்த்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    அருகில் இருந்த மாணவர்கள் சீனிவாசலுவை மீட்டு கூடுரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கல்லூரி மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் அவர் பிணத்தை பார்த்து விடுதி வார்டன் மயங்கி விழுந்து இறந்த சம்பவமும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×