மணமேடையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மணமகள்

வீடியோவில் மணமகளின் அருகே மணமகன் அமைதியாக ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறார்.மணமகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேடையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மணமகள்
Published on

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள சேலம்பூர் பகுதியை சேர்ந்த மணமகள் ஒருவர் மணமேடையில் அமர்ந்தவாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில் மணமகளின் அருகே மணமகன் அமைதியாக ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறார். ஆனால் மணமகள் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 4 முறை சுடுகிறார்.

இந்த சம்பவம் கடந்த 7-ந்தேதி நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட பிறகு அந்த துப்பாக்கியை மணமகள் தனது அருகில் இருப்பவரிடம் கொடுக்கிறார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக மணமகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com