search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் மாதத்தில் ஒருநாள் தூய்மை பணி- மலைப்பாதை முழுவதும் 2,000 பேர் சுத்தம் செய்தனர்
    X

    திருப்பதியில் மாதத்தில் ஒருநாள் தூய்மை பணி- மலைப்பாதை முழுவதும் 2,000 பேர் சுத்தம் செய்தனர்

    • திருமலைச் செல்லும் இரண்டு மலைப்பாதை சாலைகள் மற்றும் நடைபாதையாக பக்தர்கள் பயன்படுத்தும் சாலைகளையும் முழுவதுமாக சுத்தம் செய்தனர்.
    • பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம், மலைப்பாதை மற்றும் நடைபாதைகளில் பக்தர்கள் கொண்டுவரும் உணவு தண்ணீர் பாட்டில்களால் அதிக அளவில் குப்பை சேருகின்றன.

    இவற்றை அகற்ற திருப்பதியில் மாதத்தில் ஒருநாள், சுத்த திருமலை, 'சுந்தர திருமலை என்ற பெயரில் சுத்தம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் பங்கேற்க முக்கியமான பிரமுகர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது.

    அதன்படி முதன் முறையாக மே மாதத்திற்கான சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது.

    இந்தத் தூய்மைப் பணியை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரமணா தொடங்கி வைத்தார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, கலெக்டர் தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட 2000 பேர் பங்கேற்றனர்.

    திருமலைச் செல்லும் இரண்டு மலைப்பாதை சாலைகள் மற்றும் நடைபாதையாக பக்தர்கள் பயன்படுத்தும் சாலைகளையும் முழுவதுமாக சுத்தம் செய்தனர்.

    அந்தப் பகுதிகளில் பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.

    அவர்களுடன் கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஆர்வத்துடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நபர்களை குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டு சேர்ப்பது, பணி முடிந்த பிறகு மீண்டும் அவர்களை அழைத்துச் செல்ல வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.

    அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கினர். சேகரிக்கப்பட்ட குப்பைகளை உடனுக்குடன் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    இது குறித்துப் பேசிய திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, 'திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்' என்று பக்தர்களிடம் வலியுறுத்தினார்.

    Next Story
    ×