search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உடல் எடை, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு காட்டும் நவீன எந்திரம்- தெலுங்கானா பஸ் நிலையங்களில் வைக்க ஏற்பாடு
    X

    உடல் எடை, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு காட்டும் நவீன எந்திரம்- தெலுங்கானா பஸ் நிலையங்களில் வைக்க ஏற்பாடு

    • பொதுமக்கள் செல்போன் எண்ணுடன் பதிவுசெய்து, திரையில் தோன்றும் கட்டளைகளைப் பின்பற்றி அதனை தொடர வேண்டும்.
    • உடல் நலனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்ற பிற விவரங்களையும் வழங்குகிறது.

    திருப்பதி:

    ஒரு காலத்தில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் உடல் எடையிடும் எந்திரம் இருந்தது, அது உங்கள் எடையை உங்களுக்குத் தெரிவிக்கும் மற்றும் அன்றைய நாளுக்கான ராசி பலனையும் கொடுக்கும்.

    வண்ண விளக்குகளுடன் ஜொலிக்கும் இந்த எந்திரத்தில் ஏறி நின்று எடை மட்டுமின்றி தங்களின் ராசி பலனை அறியவும் ஆர்வத்துடன் காசு போட்டு பரிசோதனை செய்து கொள்வார்கள். காலம் மாற, இந்த எந்திரங்கள் அரிதாகிவிட்டன.

    எடை தெரிந்து கொள்வது மட்டுமின்றி பிற முக்கியத் தேவைகளையும் கண்டறியும் அதேபோன்ற எந்திரங்களை மீண்டும் தெலுங்கானா மாநிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    எடை போடும் எந்திரம் போல தயாரிக்கப்பட்ட இது தானாக செயல்படும்.

    பொதுமக்கள் செல்போன் எண்ணுடன் பதிவுசெய்து, திரையில் தோன்றும் கட்டளைகளைப் பின்பற்றி அதனை தொடர வேண்டும்.

    "உடல் எடை, உயரம், ரத்த அழுத்தம் போன்றவற்றை தெரிவிக்கும். மிக முக்கியமாக, இது உடல் கொழுப்பைப் பற்றிய விவரங்களையும், உடற்பயிற்சி நிலைகளில் எங்கே இருக்கிறீர்கள், எங்கு இருக்க வேண்டும். மேலும் உடல் நலனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்ற பிற விவரங்களையும் வழங்குகிறது.

    மேலும் சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் உடல் ஆய்வு குறித்து விரிவான அறிக்கையை அனுப்பி வைக்கும்.

    சுகாதார சோதனைகளை வேடிக்கையாக இந்த எந்திரம் வெளிக்காட்டும்.இது முற்றிலும் தெலுங்கானாவில் தயாரிக்கப்பட்டது மற்றும் பயன்படுத்த எளிதானது.

    இந்த எந்திரங்கள் ஐதராபாத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கிடைக்கின்றன, அவற்றை அனைத்து பஸ் நிலையங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×