இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி

இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டெல்லி வந்தடைந்த ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி
டெல்லி வந்தடைந்த ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி
Published on

புதுடெல்லி:

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியும், புதினும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் நேற்று நள்ளிரவு டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com