டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையனை மடக்கி பிடித்த போலீசார்

தயான்சிங் கடந்த வருடம் தான் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியாகி இருக்கிறான். நவ்நீத்தை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையனை மடக்கி பிடித்த போலீசார்
Published on

டெல்லி:

டெல்லியின் நிஹால் விகார் பகுதியில் போலீஸ் ஏட்டுகளான மனோஜ், தேவேந்தர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் துப்பாக்கியுடன் செல்வதை பார்த்தனர்.

அவர்களை பின்தொடர்ந்து பிடிக்க முயன்றபோது ஒருவன் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான். மற்றொருவன் போலீசாரை நோக்கி அவன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டினான்.

உடனே போலீஸ் ஏட்டு மனோஜ் சிறிதும் பயமின்றி அவன் மீது பாய்ந்து அவனை மடக்கி பிடித்து தாக்கினார். உள்ளூர் மக்களும் போலீசுடன் சேர்ந்து அவனை பிடிக்க உதவினர். அவனை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர்.

அவனது பெயர் தயான் சிங் (26) என்பதும் தப்பி ஓடியவன் நவ்நீத் (21) என்பதும் தெரியவந்தது. இருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தயான்சிங் கடந்த வருடம் தான் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியாகி இருக்கிறான். வெளியே வந்ததும் சிறிய குற்றங்களை செய்து வந்த அவன் போலீசிடம் சிக்கி உள்ளான். நவ்நீத்தை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய போதும் துணிச்சலாக தயான்சிங்கை போலீஸ் ஏட்டு மனோஜ் மடக்கி பிடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. போலீஸ் ஏட்டு மனோஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com