

திருப்பதி:
ஆந்திராவில் வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து உள்ளது.
ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் ஜனசேனா 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
நடிகர் பவன் கல்யாணை எதிர்த்து பித்தாபுரம் தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் போட்டியிட உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.