

இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கும், வர்த்தகத்திற்கும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் இறைச்சி வியாபாரிகளும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், அசாமில் இருந்து நாகாலாந்துக்கு சட்டவிரோதமாக நாய்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் ஒரு வீட்டில் சாக்குகளிலும், கயிறுகளிலும் நாய்களை கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நாய்களை சாக்கு பைகளில் அடைத்து வேன் மூலம் நாகாலாந்துக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
நாகாலாந்தில் நாய் இறைச்சி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி சட்டவிரோதமாக நாய்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்.. நண்பரை தாக்கியதில் பார்வை பறிபோனது: டிரைவருக்கு ஆயுள் தண்டனை