ஐதராபாத்தில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'

பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
ஐதராபாத்தில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
Published on

பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.

தென் மாநிலங்களில் மோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இன்று ஒரே நாளில் கேரளா, தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்.

பிரதமர் மோடி கேரளா, நாகர்கோவில் பொதுகூட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா செல்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் சிறப்பு விமானம் மூலம் தெலுங்கானா பேகம் பேட் விமான நிலையத்திற்கு வருகிறார்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு மல்காஜ் கிரி, செகந்திராபாத் மற்றும் ஐதராபாத் தொகுதிகளை உள்ளடக்கிய மிர்ஜல குடாவில் தொடங்கி மல்காஜ்கிரி சதுக்கம் வரை 1.3 கிலோ மீட்டர் தூரம் ஒரு மணி நேரம் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பா.ஜ.க. தலைவர்கள் செய்துள்ளனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை 11 மணிக்கு மகபூப் நகர், நாகர் கர்னூல், நல்கொண்டா தொகுதிகளை உள்ளடக்கிய நாகர் கர்னூலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் குல்பர்கா புறப்பட்டு செல்கிறார்.

வரும் 18-ந் தேதி மீண்டும் தெலுங்கானா வரும் பிரதமர் மோடி கரீம் நகர், நிஜமாபாத், அடிலாபாத் தொகுதிகளை உள்ளடக்கிய ஜகிர் தாலாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com